கடந்த அரசாங்கத்தில் பிரதான அமைச்சராக செயற்பட்ட பிரபல அரசியல்வாதி ஒருவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறித்த முன்னாள் அமைச்சரை இன்று அல்லது நாளை கைது செய்ய பொலிஸார் தயாராகி வருவதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சர்ச்சைக்குரிய நிதி பரிவர்த்தனை தொடர்பான வழக்கு விசாரணைக்கமைய, இந்த கைது இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
வழக்கு விசாரணை
இந்த வழக்கு விசாரணை நீண்ட காலமாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியின் போது சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மீளப்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சமகால அரசாங்கத்தின் கீழ் அது தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் இது தொடர்பான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.