Courtesy: Sivaa Mayuri
இலங்கையின் அரசியல் வரலாற்றில் பலமான கூட்டணியாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை ஐக்கிய மக்கள் சக்தி எதிர்கொள்ளும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார (Ranjith Mathuma Bandara) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான ஒப்பந்தம் ஓகஸ்ட் 8ஆம் திகதி கையெழுத்தாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
உடன்படிக்கை
குறித்த விடயத்தினை இன்று(23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட மத்தும பண்டார, எதிர்வரும் தேர்தலை நாடாளுமன்றத்தில் உள்ள பலம் வாய்ந்த கட்சிகளின் கூட்டணியாக ஐக்கிய மக்கள் சக்தி எதிர்கொள்ளும் என்று அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றின் சுமார் 35 நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய கூட்டணியால், இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் பொதுமக்களுக்கு அது தொடர்பில் தெரியப்படுத்தப்படும் என அவர் அறிவித்துள்ளார்.