முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காணிகளைச் சுவீகரிக்கும் வர்த்தமானி..! அரசாங்கத்திடம் சுமந்திரனின் கேள்வி

காணிகளைச் சுவீகரிக்கும் வர்த்தமானியை இரத்துச்
செய்வதற்கு தீர்மானித்திருந்த அரசாங்கம், குறித்த இரத்து செய்யும் நடவடிக்கையை நடைமுறைப்படுத்த ஏன் தாமதிக்கிறது என தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் வினவியுள்ளார்.

தனது முகநூலில் இட்டுள்ள பதிவொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பதிவில் மேலும்,

வடக்கில் 5 ஆயிரத்து 940 ஏக்கர் காணிகளுக்கான தமது உரித்தை நிரூபிக்குமாறு
காணி நிர்ணயச் சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ் 28.03.2025 அன்று வெளியிடப்பட்ட
வர்த்தமானியின் பிரகாரம், காணி உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம்
இம்மாதம் 28ஆம் திகதியுடன் முடிவடைகின்றது.

கால அவகாசம்

அந்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் எதிர்ப்பை வெளிப்படுத்தி சட்ட மறுப்புப்
போராட்டத்தை நடத்துவது குறித்து நாம் வழங்கிய காலக்கெடு முடிவடைவதற்கு ஒரு நாள்
இருக்கையில், அதனை மீளப்பெறப் போவதாகக் கடந்த மாதம் 27ஆம் திகதி அரசு
அறிவித்தது.

அந்த வாக்குறுதி உடனடியாக நிறைவேற்றப்படும் என நாம்
எதிர்பார்த்தோம்.

ஆனால் இரண்டு வாரங்கள் கடந்தும் இந்த வர்த்தமானி அறிவித்தல் இரத்துச்
செய்யப்படாததன் காரணமாக, அது குறித்து கடந்த 12ஆம் திகதி உயர்நீதிமன்றத்தில்
அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல் செய்தேன்.

கடந்த செவ்வாயன்று இந்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது,
அமைச்சரவையின் அறிவுறுத்தல் பெறுவதற்குச் சட்டமா அதிபர் நேற்று வரை கால அவகாசம் கோரியிருந்தார்.

காலக்கெடு 

அதனையடுத்து, நேற்று வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அரசின் முடிவை
அறிவிப்பதற்கு எதிர்வரும் 27ஆம் திகதி வரை சட்டமா அதிபர் மீண்டும் கால
அவகாசம் கோரியிருக்கின்றார்.

காணிகளைச் சுவீகரிக்கும் வர்த்தமானி..! அரசாங்கத்திடம் சுமந்திரனின் கேள்வி | Sumanthiran Questions Gazette On Northern Lands

இது மேற்படி வர்த்தமானி அறிவித்தலில்
குறிப்பிடப்பட்டிருக்கும் காலக்கெடு முடிவடைவதற்கு ஒரு நாள் அவகாசத்தை
மாத்திரமே கொண்டிருக்கின்றது.

அவ்வாறெனில், இந்த வர்த்தமானி அறிவித்தல்
தொடர்பில் தாம் தீர்மானித்திருப்பதாகக் கூறியதை நடைமுறைப்படுத்துவதற்கு அரசு
தயங்குவது ஏன்? – எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.