2025 ஆம் ஆண்டிற்கான ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
குறித்த பட்டியலில் இந்தியா மற்றும் ஹொங்ஹொங் மூலமும் சில முக்கிய தொழிலதிபர்கள் இடம் பிடித்துள்ளனர்.
பணக்காரர்கள்
இதனடிப்படையில், 2025 இல் ஆசியாவின் டாப் 10 பணக்காரர்கள்,
- முகேஷ் அம்பானி (இந்தியா) – $86.9 பில்லியன்
- ஜோங் ஷான்ஷான் (சீனா) – $56.0 பில்லியன்
- கவுதம் அதானி (இந்தியா) – $54.7 பில்லியன்
- மா ஹூடெங் (சீனா) – $53.3 பில்லியன்
- ஜாங் யிமிங் (சீனா) – $45.6 பில்லியன்
- தடாஷி யனை & குடும்பம் (ஜப்பான்) – $45.1 பில்லியன்
- லெய் ஜுன் (சீனா) – $42.6 பில்லியன்
- காலின் ஹுஆங் (சீனா) – $40.0 பில்லியன்
- லீ கா-ஷிங் (ஹொங்ஹொங்) – $38.3 பில்லியன்
- ராபின் செங் (ஹொங்ஹொங்) – $37.6 பில்லியன்
மொத்தம் பத்து பேரில் ஐந்து பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள், இதன் மூலம் சீனா ஆசியாவின் முதலீட்டு வளர்ச்சியில் முன்னிலை வகிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியா இரண்டு இடங்களைப் பிடித்து, வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் முன்னணியாக உள்ளதுடன் ஹாங்காங் மற்றும் ஜப்பான் தலா ஒரு இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.