கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ட்ரம்ப் தனது சமூக ஊடக வலைத்தளமான ட்ரூத் பக்கத்தில், “பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களுக்கு அமைதி உண்டாகட்டும்.
ட்ரம்பின் இரங்கல்
கடவுள் அவரையும் அவரை நேசித்த அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.” என்று அவர் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
உடல் நலக்குறைவு காரணமாக பாப்பரசர் பிரான்சிஸ் அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து திரும்பியிருந்தார்.
இந்நிலையில், வத்திக்கானில் காசா சாண்டா மார்ட்டாவில் உள்ள தனது இல்லத்தில் இன்று (21) காலமானார்.

