ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறார் என்பது அறிந்திருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ ட்ரூத் சோசியல் கணக்கில் வெளியிட்டுள்ள பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கமேனியை கொல்ல முடிந்தாலும் தற்காலிகமாக அதைத் தவிர்த்துவிட்டுள்ளதாகவும் ஆனால் தாங்கள் பொறுமையிழந்து வருவதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
ஈரான் ஆகாய கட்டுப்பாடு
அந்த பதில் அவர் மேலும் கூறியுள்ளாவது, “ உச்ச தலைவர் எங்கு இருக்கிறார் என்பது நமக்குத் தெரியும். அவரை கொல்ல எளிதான இலக்காக இருக்கிறார்.
( @realDonaldTrump – Truth Social Post )
( Donald J. Trump – Jun 17, 2025, 12:19 PM ET )We know exactly where the so-called “Supreme Leader” is hiding. He is an easy target, but is safe there – We are not going to take him out (kill!), at least not for now. But we don’t want… pic.twitter.com/CJljmslKfB
— Donald J. Trump 🇺🇸 TRUTH POSTS (@TruthTrumpPosts) June 17, 2025
எனினும், இப்போது அவ்வாறு செய்வதில்லை.
ஏனெனில், நாங்கள் நமது குடிமக்கள் மற்றும் படையினருக்கு எதிரான பழிவாங்கலை விரும்பவில்லை, ஆனால் எங்களுடைய பொறுமை குறைந்து கொண்டிருக்கிறது,”
இதேவேளை, ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் அமெரிக்கா சேருமா என்ற கேள்விகள் எழுந்துள்ள சூழலில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள மற்றுமொரு பதிவில், “இப்போது ஈரானின் ஆகாயத்தின் முழுமையான கட்டுப்பாடு எங்களிடம் உள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.

