முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அடிபணிய மறுத்த நிர்வாகம்..! ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் கை வைக்கும் ட்ரம்ப்

ஹாவர்ட் பல்கலைக்கழகத்திற்கு (Harvard University) அதிக வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald trump) எச்சரித்துள்ளார். 

பல்கலைக்கழகத்திற்கு என வரி விலக்கு உரிமை இருக்கிறது. இது பறிக்கப்படும். பல்கலைக்கு அரசு ஆதரவு வேண்டும் எனில், பல்கலை பொது விஷயத்தில் தலையிடாமல் இருக்க வேண்டும் என்றும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயங்களை அவர் தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்கள் நாடு கடத்தப்படுவார்கள்

அத்துடன், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கல்வி நிலையங்களில் போராட்டங்களில் ஈடுபடும் மாணவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அடிபணிய மறுத்த நிர்வாகம்..! ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் கை வைக்கும் ட்ரம்ப் | Trump Threatens Harvards Tax Status Freezing Funds

பல்கலைகழக தலைமையில் மாற்றம் செய்ய வேண்டும், மாணவர் சேர்க்கை முறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும், சில மாணவர் அமைப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என டரம்ப அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

எனினும் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் டிரம்ப் நிர்வாக உத்தரவுக்கு இணங்கப்போவதில்லை என ஹாவர்ட் பல்கலைகழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஹாவர்ட் பல்கலைக்கழகத்திற்கான $2.2 பில்லியன் மதிப்புள்ள நிதி உதவிகள் நிறுத்தப்படும் என்றும், சுமார் 600 மில்லியன் டாலர் மதிப்பிலான திட்டங்கள் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் வெள்ளை மாளிகை அறிவித்திருக்கிறது.

ஹார்வர்ட் பல்கலைக்கழகம், அமெரிக்காவின் வருமான வரி சட்டத்தின் பிரிவு 501(c)(3) கீழ் கல்வி நிறுவனமாக வரிவிலக்கு பெற்று வருகிறது.

வரி விலக்கு

ஹார்வர்ட் பல்கலைக்கழகம் பாஸ்டன் மற்றும் கேம்பிரிட்ஜ் நகரங்களில் சொத்தை வைத்திருக்கிறது. இந்த சொத்துக்கு வரி உண்டு.

அடிபணிய மறுத்த நிர்வாகம்..! ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் கை வைக்கும் ட்ரம்ப் | Trump Threatens Harvards Tax Status Freezing Funds

ஆனால் இது பல்கலைக்கழக சொத்து என்பதால் வரி விலக்கு வழங்கப்பட்டிருந்தது. இனி இந்த சொத்துக்களுக்கு பல்கலைக்கழகம் வரி செலுத்தும் சூழல் உருவாக வாய்ப்பு இருக்கிறது. 

ஹாவர்ட் பல்கலைக்கழகம் தற்போது வரை பல்கலைக்கழகம் என்கிற அந்தஸ்தின் கீழ் வரி விலக்கை பெற்று வருகிறது.

இனி இந்த அந்தஸ்தின் கீழ் ஹாவர்ட் வருமா என்பது சந்தேகமே! என்று கல்வியாளர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.