Home உலகம் உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு மறைமுக ஆதரவு வழங்குகின்றதா சீனா…. அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை

உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு மறைமுக ஆதரவு வழங்குகின்றதா சீனா…. அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை

0

தமது நாட்டு நிறுவனங்கள் மீது அமெரிக்கா (US) பொருளாதாரத் தடை விதித்திருப்பதற்கு சீனா (China) கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்யாவுக்கு (Russia) ஆதரவாக செயற்பட்டதாக குற்றஞ்சாட்டி ஆசியா (Asia), மத்திய கிழக்கு நாடுகள் (Middle East), ஐரோப்பிய (Europe) பிராந்தியங்களில் செயற்பட்டு வரும் பல்வேறு நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்கா கடந்த வாரம் பொருளாதாரத் தடைகளை விதித்தது.

இதற்கு கண்டனம் வெளியிட்டு சீன வா்த்தக அமைச்சகம் நேற்று (25) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “சீனாவைச் சோ்ந்த பல்வேறு நிறுவனங்களை ஏற்றுமதி கட்டுப்பாட்டுப் பட்டியலில் அமெரிக்கா இணைத்துள்ளது.

பொருளாதாரத் தடை

இதன்மூலம் சீன நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்களுக்கு பொருட்களை வழங்குவதை அந்நாடு தடுத்துள்ளது. அமெரிக்கா விதித்துள்ள இந்தப் பொருளாதாரத் தடை ஏற்றுக் கொள்ள முடியாத ஒருசாா்பு நடவடிக்கையாகும்.

இது சா்வதேச வா்த்தகத்தைப் பாதிப்பதுடன் குறித்த தடை வா்த்தக விதிகளுக்கு எதிரானது. இந்த நியாயமற்ற நடவடிக்கையை அமெரிக்கா உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். ஏனெனில் சீன நிறுவனங்களின் உரிமைகளைப் பாதுகாப்பது அரசின் முக்கிய கடமையாக உள்ளது.“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய – உக்ரைன் போர் 

அத்துடன் இதற்கு முன்னதாக, சீன நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட தடை குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்ட செய்தியில், “சீனாவைச் சோ்ந்த சில நிறுவனங்கள் ரஷ்ய நிறுவனங்களுக்கு பல்வேறு கருவிகளுக்கான உதிரிபாகங்களை அனுப்பி வருகின்றன.

உக்ரைனுக்கு (Ukraine) எதிரான ரஷ்யாவின் போரில் சீனா நடுநிலை வகிப்பதுபோல காட்டிக் கொண்டாலும், மேற்கத்திய நாடுகள் மீதுள்ள பகையுணா்வு காரணமாக ரஷ்யாவை ஆதரித்து வருகிறது“ என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version