அமெரிக்காவின் வரிவிதிப்பு பிரச்சினை மற்றும் இலங்கை மீதான அதன் தாக்கம் குறித்து கலந்துரையாட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி, ஜனாதிபதி அநுர குமார நாளையதினம் (09) ஜனாதிபதி செயலகத்தில் கூட்டத்தை கூட்டவுள்ளதாக எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பல எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியிடம் கலந்துரையாட வலியுறுத்தியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
எவ்வாறாயினும், நடைபெறவுள்ளதாக கூறப்படும் இந்த கூட்டம் தொடர்பில், ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில், இலங்கை உட்பட பல நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி அறிவித்த புதிய வரிகள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

