முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அதிபர் நியமனத்தில் பாரபட்சமா? ஆளுநரிடம் சென்ற பரபரப்பு முறைப்பாடு

வடக்கு மாகாணத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் முதல் வழங்கப்பட்ட அதிபர் நியமனங்கள் மற்றும் இடநிலைப்படுத்தல் நடவடிக்கைகளில் முறைகேடுகள் மற்றும் பாரபட்சம் இடம்பெற்றுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது.

இது தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள ஆசிரியர் சங்கம், அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்புக்கு முரணாக சில நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக பல அதிபர்கள் இதுவரை தங்களது கடமைகளை பொறுப்பேற்க முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

தரம் 3 அதிபர் சேவைக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு 2023 டிசம்பர் 15ஆம் திகதி முதல் பல்வேறு திகதிகளில் வடக்கு மாகாண பாடசாலைகளுக்கான இடநிலைப்படுத்தல் கடிதங்கள் வழங்கப்பட்டதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்பின் பிரிவு 11-இன் கீழ், பதவிகளுக்கு நியமனம் செய்யும்போது சேவை மூப்பு மற்றும் திறமை ஆகியவை கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், 

சில நியமனங்களில் இந்த விடயங்கள் உரிய முறையில் கவனத்தில் கொள்ளப்படவில்லை என பாதிக்கப்பட்ட தரப்பினர் தங்களிடம் முறையிட்டுள்ளதாக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், சில அதிபர்கள் அரசியல் தலையீடு மற்றும் பல்வேறு செல்வாக்குகளின் அடிப்படையில் இடநிலைப்படுத்தப்பட்டதாகவும், பின்னர் மருத்துவக் காரணங்களை முன்வைத்து குறுகிய காலத்திலேயே சொந்த மாவட்டம் அல்லது வலயத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதன் காரணமாக, அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்புக்கு அமைவாக நியமனம் மற்றும் இடநிலைப்படுத்தல் பெற வேண்டிய சில அதிபர்கள் இன்றுவரை கடமையேற்க முடியாத நிலையில் இருப்பதாகவும் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் பாதிக்கப்பட்ட அதிபர் ஒருவர் ஜனாதிபதி செயலகத்திலும் முறைப்பாடு செய்துள்ளதாகவும், அந்த முறைப்பாடு தொடர்பான விடயம் ஆளுநரின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு மாகாணத்தில் அதிபர் நியமனங்கள் மற்றும் கடமையேற்காத அதிபர்கள் தொடர்பான பிரச்சினைகள் ஏற்கனவே அதிகாரிகளின் கவனத்திற்கு வந்துள்ளன. 

2025ஆம் ஆண்டு ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், கடமையேற்காத அதிபர்கள் தொடர்பில் விசாரணை நடத்த குழுவொன்றை அமைக்க தீர்மானிக்கப்பட்டதாக வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் அதிபர்களின் விடயங்களை அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்பின் அடிப்படையில் நியாயமான முறையில் பரிசீலித்து, அவர்கள் உரிய முறையில் கடமையேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Source: https://samugammedia.com/bias-in-principal-appointments-sensational-complaint-lodged-with-the-governor-1790213265

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.