முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் இரண்டு வருடங்களின் பின்னர் தோண்டப்பட்ட சடலம்: வெளிவரவுள்ள பின்னணி

மன்னார் (Mannar) நீதிமன்றத்தில் விபத்து தொடர்பான வழக்கில் உள்ள நபரான ஜேசுதாசன் ரஞ்சித்குமார் (வயது 42) என்பவர் கடந்த 2022.06.13 அன்று உயிரிழந்த நிலையில் அவரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – கல்லூண்டாயில் உள்ள சேமக்காலையில் அவரது உடலம் அடக்கம் செய்யப்பட்ட நிலையில் நேற்றையதினம் (03) அவரது சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் மன்னார் – இலுப்பை கடவை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த குறித்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று நவாலி பகுதியில் வசித்து வந்துள்ளார்.

வழக்கு விசாரணை

இந்த விபத்து சம்பவம் தொடர்பாக மன்னார் நீதிமன்றத்திலும் வழக்கு உள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் அவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார்.

யாழில் இரண்டு வருடங்களின் பின்னர் தோண்டப்பட்ட சடலம்: வெளிவரவுள்ள பின்னணி | Body Exhumed After Two Years In Jaffna

அவர் மூளைக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்ததாக வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ள நிலையில், கிராம சேவகரும் அதற்கு இணங்க பூர்வாங்க செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், கல்லூண்டாய் சென். பீற்றர் தேவாலய சேமக்காலையில் அவரது சடலம் அடக்கம் செய்யப்பட்டது.

இது இவ்வாறு இருக்கையில் குறித்த நபர் மீதான விபத்து மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது குறித்த நபர் அங்கு பிரசன்னமாகவில்லை.

உடற்கூற்று பரிசோதனை

குறித்த நபர் உயிரிழந்து, அவரது சடலம் யாழ்ப்பாணத்தில் புதைக்கப்பட்ட விடயம் அதன் பின்னரே நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

யாழில் இரண்டு வருடங்களின் பின்னர் தோண்டப்பட்ட சடலம்: வெளிவரவுள்ள பின்னணி | Body Exhumed After Two Years In Jaffna

அந்தவகையில், சடலத்தை புதைத்த பகுதி மல்லாகம் நீதிமன்றத்தின் நியாயாதிக்க எல்லைக்குள் உள்ளமையால் இது குறித்து மல்லாகம் நீதிமன்றத்திற்கு அறிவித்தல் வழங்கப்பட்டது.

அதன்படி, உடற்கூற்று பரிசோதனைகளுக்காக அவரது சடலத்தை தோண்டுமாறு மல்லாகம் நீதிமன்றம் விசேட உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், மல்லாகம் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் சட்ட வைத்திய அதிகாரி, தடயவியல் காவல்துறையினர், பிரதேச சபையினர், மன்னார் காவல்துறையினர், மானிப்பாய் காவல்துறையினர், கிராம அலுவலர்கள், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் ஆகியோரின் பிரசன்னத்துடன் சடலம் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அகழ்ந்து எடுக்கப்பட்ட சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.