இராமேஸ்வரம் கடற்கரைப் பகுதியில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்துவதற்காக மறைத்து
வைக்கப்பட்டிருந்த 150 புறாக்களை தமிழ்நாடு பொலிஸார் நேற்று அதிரடியாகக் கைப்பற்றியுள்ளனர்.
இராமேஸ்வரம் பகுதியில் இருந்து இலங்கைக்கு விசித்திரப் பறவைகள் கடத்தப்படவுள்ளதாக பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
இதன்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 150 புறாக்களை பொலிஸார் மீட்டனர்.
இவை எதற்காக இலங்கைக்கு கடத்தப்படவிருந்தன மற்றும் இதன் பின்னணியில் உள்ள கடத்தல் கும்பல் யார் என்பது குறித்து தமிழக கியூ பிரிவு மற்றும் உள்ளூர் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

