முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கைக்கு ஜெட்ஸ்டாரின் முதலாவது நேரடி விமான சேவை ஆரம்பம்; நீர்த்தாரை மரியாதையுடன் வரவேற்பு

ஆஸ்திரேலியாவின் முன்னணி விமான நிறுவனமான ஜெட்ஸ்டார் ஏர்வேஸ் (Jetstar Airways), மெல்போர்னில் இருந்து இலங்கையின் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) தனது முதலாவது நேரடி விமான சேவையை ஆரம்பித்துள்ளது.

இதன்படி, மெல்போர்ன் மற்றும் கொழும்பு இடையே வாரத்திற்கு மூன்று நேரடி விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. மெல்போர்னில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள 10ஆவது சர்வதேச விமான சேவையாகவும் இது அமைந்துள்ளது.

இலங்கையை வந்தடைந்த ஜெட்ஸ்டாரின் கன்னி விமானத்திற்கு, ஏர்போர்ட் & ஏவியேஷன் சர்வீசஸ் (ஸ்ரீலங்கா) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தினால் பாரம்பரிய நீர்த்தாரை மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இலங்கை சுற்றுலா சபையின் ஏற்பாட்டில் நாட்டின் பாரம்பரிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் கண்டிய நடன நிகழ்வும் இடம்பெற்றது. மேலும், ஜெட்ஸ்டார் நிறுவனத்தின் இலங்கைக்கான புதிய விமான சேவையை அதிகாரப்பூர்வமாக குறிக்கும் வகையில்  கேக் வெட்டும் நிகழ்வும் நடைபெற்றது.

இலங்கைக்கு வருகை தந்த பயணிகளுக்கு பாரம்பரிய விருந்தோம்பலுடன் வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், இலங்கை தேயிலை சபையின் அனுசரணையில் பிரத்யேக சிலோன் தேயிலைப் பொதிகளும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

மெல்போர்ன் – கொழும்பு இடையிலான இந்த புதிய நேரடி விமான சேவை, இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலா, வர்த்தகம் மற்றும் கலாசார தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: https://samugammedia.com/jetstars-first-direct-flight-service-to-sri-lanka-begins-waterfront-welcomes-it-with-respect-1787729527

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.