விக்ரம்
திரையுலகில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து கொண்டிருக்கும் நட்சத்திரங்களில் ஒருவர் விக்ரம். ஒவ்வொரு திரைப்படத்திற்கும் தனது உடலை வருத்திக்கொண்டு, கெட்டப்பை மாற்றி நடிப்பதில் திறமைபடைத்தவர்.

நான்கு நாட்களில் விஜய் சேதுபதியின் ஏஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
காசி, சேது, அந்நியன், கோப்ரா, ஐ, தங்கலான் என பல படங்களில் தனது உடலை வருத்திக்கொண்டு நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக வீர தீர சூரன் படம் வெளிவந்தது. இதை தொடர்ந்து இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா பிரபலங்களில் ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருப்பவர்கள் சிலர் மட்டுமே. தளபதி விஜய் தான் வைத்திருந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை அண்மையில் விற்றுவிட்டார். நடிகர் தனுஷ் ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்துள்ளார்.
ரோல்ஸ் ராய்ஸ்
இந்த நிலையில், சமீபத்தில் நடிகர் சீயான் விக்ரம் புதிதாக ரோல்ஸ் ராய்ஸ் Spectre என்கிற புதிய மாடல் காரை வாங்கியுள்ளார். இந்த சொகுசு காரின் விலை ரூ. 8 கோடி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இதுதான் விக்ரம் வாங்கியுள்ள புதிய ரோல்ஸ் ராய்ஸ் Spectre கார் என ரசிகர் பதிவிட்ட வீடியோ வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ..
View this post on Instagram

