இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள், நிதியமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளனர்.
இலங்கையின் கடன் வேலைத்திட்டத்தின் ஏழாவது மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்காக IMF குழுவினர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இதன்போது, இலங்கை கனிப்பொருள் எண்ணெய் கூட்டுத்தாபனம், மின்சாரத் துறை ஒழுங்குமுறை அதிகாரசபைகள் மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகளுடனும் IMF பிரதிநிதிகள் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தக் கலந்துரையாடல்கள் எதிர்வரும் செப்டெம்பர் 23ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் கடன் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் உள்ளிட்ட விடயங்கள் இந்த மீளாய்வின்போது கவனத்தில் கொள்ளப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
Source: https://samugammedia.com/imf-team-visits-sri-lanka-talks-begin-with-finance-minister-1789276238

