முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையில் ஆண்டுதோறும் 1,000 குழந்தைகளுக்கு புற்றுநோய் – வைத்தியர் அதிர்ச்சி தகவல்!

இலங்கையில் பிறப்பு முதல் 19 வயது வரையிலான குழந்தைகள் மற்றும் பருவவயதினரில் வருடாந்தம் சுமார் 900 முதல் 1,000 புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகி வருவதாக சமூக வைத்திய நிபுணர் வைத்தியர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார்.

தேசிய புற்றுநோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் நேற்று (09) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் மற்றும் பருவவயதினரிடையே அதிகளவில் ரத்தப் புற்றுநோய் (லியுகேமியா), நிணநீர்ச் சுரப்பிப் புற்றுநோய் (லிம்போமா), மூளைப் புற்றுநோய், எலும்புப் புற்றுநோய் மற்றும் கண் புற்றுநோய் ஆகியவை கண்டறியப்படுவதாகவும் வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எந்தவொரு புற்றுநோயையும் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, அதற்கேற்ற முறையான சிகிச்சையை வழங்குவதன் மூலம் குணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் மற்றும் பருவவயதினரிடையே ஏற்படும் புற்றுநோய்கள் மற்றும் அவற்றுக்கான சிகிச்சைகள் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், உலகளவில் செப்டம்பர் மாதம் ‘குழந்தைப் பருவப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக’ அனுஷ்டிக்கப்படுகிறது.

இந்த நிலையில், குழந்தைகளின் உடல்நிலையில் ஏற்படும் சந்தேகத்திற்கிடமான மாற்றங்களை கவனித்து, உரிய மருத்துவ ஆலோசனையைப் பெறுவது முக்கியம் என சுகாதாரத் தரப்பினர் வலியுறுத்துகின்றனர்.

Source: https://samugammedia.com/in-sri-lanka-every-year-1000-children-get-cancer–shocking-news-from-doctors-1789016104

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்