முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கை–ரஷ்யா கடற்றொழில் ஒத்துழைப்பை வலுப்படுத்த முக்கிய கலந்துரையாடல்

இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான கடற்றொழில், கடல்சார் வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் இன்று (28) நடைபெற்றது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவான் எஸ். டிகேரியன் ஆகியோருக்கு இடையில் கடற்றொழில் அமைச்சில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துதல், கடற்றொழில் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் இலங்கையின் கடல்சார் உற்பத்திகளுக்கான ரஷ்ய சந்தை வாய்ப்புகளை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக, டுனா, இறால் மற்றும் நண்டு உள்ளிட்ட இலங்கையின் கடல்சார் உற்பத்திகளை ரஷ்ய சந்தைக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவது தொடர்பில் அமைச்சர் கவனம் செலுத்தினார்.

அதேவேளை, ரஷ்யாவுக்கு மீன் மற்றும் கடல்சார் உற்பத்திகளை ஏற்றுமதி செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய சர்வதேச தரநிலைகள், உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சான்றிதழ் நடைமுறைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் ஆழ்கடல் மீன்பிடித் துறையை நவீனமயமாக்குவதற்காக ரஷ்யாவின் நவீன தொழில்நுட்பம், மீன்பிடிப் படகுகள் மற்றும் உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட்டன.

மேலும், மீன்பிடித் துறைமுகங்களை நவீனமயமாக்குதல், குளிரூட்டப்பட்ட களஞ்சிய வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் கடல்சார் உற்பத்திகளைக் கையாள்வதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துதல் போன்ற துறைகளில் ரஷ்யாவின் முதலீடு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பைப் பெறுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இதனுடன், கடல் வளங்களை விஞ்ஞான ரீதியாக மதிப்பீடு செய்தல், நிலையான மீன்பிடி முறைகளை மேம்படுத்துதல் மற்றும் கடல்சார் வளங்களைப் பாதுகாத்தல் ஆகிய துறைகளில் இரு நாடுகளின் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கை மீனவர்கள் மற்றும் கடற்றொழில் துறை அதிகாரிகளுக்கான தொழில்நுட்பப் பயிற்சிகள், அறிவுப் பரிமாற்றம் மற்றும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகளில் ரஷ்ய ஒத்துழைப்பைப் பெறுவதற்கான வாய்ப்புகளும் ஆராயப்பட்டன.

1948ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும் இடையில் நிலவி வரும் நீண்டகால நட்புறவை நினைவுகூர்ந்த அமைச்சர், பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்ட காலகட்டங்களிலும் ரஷ்யா வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.

இச்சந்திப்பில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பீ.கே. கோலித்த கமல் ஜினதாச உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Source: https://samugammedia.com/key-discussion-to-strengthen-fisheries-cooperation-between-sri-lanka-and-russia-1790605380

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.