முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

’’என் கணவர் ஒரு பலிக்கடா; நிரபராதி!’’ – கண்ணீர் மல்கும் மனைவி

தனது கணவன், எந்தவொரு தப்பும் செய்யாத நிரபராதி என்றும், அநீதியான முறையில் ஒரு “பலிக்கடா” ஆகப் பயன்படுத்தப்படுகிறார் என்று முன்னாள் மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லேயின் மனைவி மனோரி சல்லே தெரிவித்தார்.

 தனது கணவரைப் பார்த்து பேசிவிட்டு வந்ததன் பின்னரே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) வெளியில் முதன்முறையாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது இவ்வாறு தெரிவித்தார்.

தனது கண்ணீரைக் கட்டுப்படுத்தியவாறு பேசிய திருமதி சல்லே, பல தசாப்தங்களாகத் தனது வாழ்க்கையை நாட்டுச் சேவைக்காக அர்ப்பணித்த ஒரு பொது ஊழியருக்கு இழைக்கப்படும் இந்த அநீதியான மற்றும் மனிதநேயமற்ற நடத்தை குறித்துத் தனது ஆழ்ந்த ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். தனது கணவர் எந்தவொரு தவறும் செய்யவில்லை என்றும், அவர் கடுமையான அநீதிக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும், தனது கணவர் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளதற்கும், தனக்கு இழைக்கப்படும் அநீதியான நடத்தைக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்திலேயே மரணம் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார் என்ற அதிர்ச்சித் தகவலையும் திருமதி சல்லே வெளிப்படுத்தினார்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு குடும்ப உறுப்பினர்கள் பலமுறை வற்புறுத்திய போதிலும், அவர் தனது நிரபராதித் தன்மையை நிலைநிறுத்துவதிலும், அழுத்தங்களுக்குப் பணிய மறுப்பதிலும் உறுதியாக இருந்து போராட்டத்தைத் தொடர்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மேஜர் ஜெனரல் சல்லே 38 வருடங்களாக நாட்டிற்குச் சேவை செய்துள்ளார் என்றும், பல சந்தர்ப்பங்களில் தனது தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்க்கையை விட நாட்டின் கடமைக்கே முன்னுரிமை அளித்தார் என்றும் அவர் கூறினார். தேசிய பாதுகாப்பில் அவருக்கிருந்த கடுமையான பொறுப்புகள் காரணமாக, அவரது பிள்ளைகளின் பள்ளி நிகழ்வுகள் உட்பட பல முக்கியமான குடும்ப விழாக்களில் கூட அவரால் கலந்து கொள்ள முடியாமல் போனதை அவர் இங்கு நினைவு கூர்ந்தார்.

அவரது உடல்நிலை மோசமடைந்து வருவது குறித்துத் தனது கவலையை வெளியிட்ட திருமதி சல்லே, அவரது நிலைமை மேலும் மோசமடைவதற்கு முன்னர் அவரை ஒரு வைத்தியசாலைக்கு மாற்றுமாறு அதிகாரிகளிடம் அவசரமாகக் கேட்டுக்கொண்டார்.

அவரது தற்போதைய மனநிலை மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கான அவரது அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும்போது, அவராக மருத்துவ உதவியை நாட வாய்ப்பில்லை என்பதால், அவரது நலனைப் பாதுகாப்பது அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Source: https://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF/150-378207

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.