முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

எல் நினோ தாக்கம் தீவிரம்: ஒக்டோபர், நவம்பரில் கனமழை, வெள்ள அபாயம்

இலங்கையைப் பாதித்துள்ள ‘எல் நினோ’ (El Niño) காலநிலை தாக்கம் காரணமாக, எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நாட்டின் சில பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரித்து வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் கணிப்புப் பிரிவின் பணிப்பாளர் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.

தற்போது பலவீனமான மட்டத்தில் காணப்படும் எல் நினோ நிலைமை, எதிர்வரும் டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் மேலும் வலுப்பெறுவதற்கான சாத்தியக்கூறு 60 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளதாக சர்வதேச சர்வதேச நோவா மையம் அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் ஜூலை, ஓகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நாட்டில் மழைவீழ்ச்சி குறையக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், குறிப்பாக ஓகஸ்ட் மாதத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுவதுடன், தற்போதைய அறிகுறிகளின்படி செப்டம்பர் மாதத்திலும் மழைப்பொழிவு குறைவாக இருக்கக்கூடும் என அவர் தெரிவித்தார்.

எனினும், பசிபிக் பெருங்கடல் பகுதியில் Typhoon போன்ற சூறாவளிகள் உருவாகும் பட்சத்தில் தற்போதைய நிலைமையில் மாற்றம் ஏற்படக்கூடும் என்றும், அதன் காரணமாக தென்மேற்கு பருவக்காற்று சுறுசுறுப்படைந்து நாட்டின் சில பகுதிகளுக்கு கூடுதல் மழை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் அஜித் விஜேமான்ன சுட்டிக்காட்டினார்.

காலநிலை மாற்றங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை கருத்தில் கொண்டு, விவசாயிகள், நீர்வள முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Source: https://samugammedia.com/l-nino-impact-intensity-heavy-rain-in-october-and-november-flood-risk-1781425699

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.