முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிறையில் எல்லா நோய்க்கும் ‘பனடோல்’ மட்டுமே மருந்து! அர்ச்சுனா எம்.பி. குற்றச்சாட்டு

 நான் யாழ்ப்பாணம் சிறையில் இருக்கும்போது என் கண்முன்னே மூன்று கைதிகள் உயிரிழந்தனர். சிறைச்சாலையில் எல்லா நோய்க்கும் பனடோல் மாத்திரமே வழங்கப்படுகின்றது. அதை தவிரே வேறு மருந்துகள் இல்லை. அதேபோல் சிறைச்சாலையில் மருத்துவர்கள் எவரும் இருப்பதில்லை. மாரடைப்பு ஏற்பட்டால் கூட அவசர சிகிச்சை அளிக்க ஒரு மருத்துவர் கடமையில் இப்பதில்லை என  நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றம்சாட்டினார்.

படவிளக்கம் 

நாடாளுமன்றத்தில் அவர் இன்றையதினம் உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இதேவேளை ஆடையைக் கழற்றிக் காண்பிக்கவா என நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் ஆவேசமாக பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, சபைக்கு இன்று வேட்டி சட்டை அணிந்து வந்திருந்தமை தொடர்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் சபையில் ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பியிருந்தார்.

உறுப்பினர் ஜெகதீஸ்வரன் எழுப்பிய பிரச்சினைக்கு உடனடியாகப் பதிலளித்த அர்ச்சுனா எம்.பி., தான் அணிந்து வந்திருக்கும் ஆடை நாடாளுமன்ற மரபுகளுக்கு உட்பட்டது தான் என்று வாதிட்டார்.

நான் நாடாளுமன்றத்திற்குப் பொருத்தமான ஆடையையே அணிந்து வந்துள்ளேன். உங்களுக்குச் சந்தேகம் இருந்தால், வேண்டுமென்றால் கழற்றிக் காண்பிக்கவா?” என்று சவால் விடுத்தார்.

இந்தச் சம்பவம் சபையில் சிறிது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தலையிட்ட சபாநாயகர், “ஆடை குறித்த விவாதம் தேவையில்லை, அது ஒரு பிரச்சினையல்ல” என்று தெரிவித்து, அர்ச்சுனா எம்.பி.யை தனது ஒழுங்குப் பிரச்சினையைச் சமர்ப்பிக்க அனுமதித்தார்.

Source: https://samugammedia.com/panadol-is-the-only-medicine-for-all-diseases-in-prison-arjuna-mp-accuses-1783590545

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.