சர்வதேச நாணய நிதியத்துடன் நேரடி உரையாடலுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்த சவாலுக்கு தேசிய மக்கள் சபை தயாராகியுள்ளதாக அதன் தேசிய செயற்குழு உறுப்பினர் சுனில் ஹதுன்நெத்தி தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ், தேவையானபடி சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி விடுத்த சவாலை ஏற்றுக்கொள்வதா அல்லது ஏற்றுக்கொள்வதில்லையா என நேரடியாகக் கூறாமல், கட்சித் தலைவர் அந்த உரையாடலில் பங்கேற்க மாட்டார் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
சஜித் பிரேமதாச
இது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு சஜித் பிரேமதாச தரப்பினர் இணைந்து கொள்ள தயாராக இருப்பதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நிதியத்துடனான ஒப்பந்தத்தை மாற்றுவது தொடர்பான இந்த உரையாடலில் கலந்துகொள்ளுமாறு சஜித் பிரேமதாச மற்றும் அநுர குமார திஸாநாயக்க ஆகியோருக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.