முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

செம்மணியில் மீட்கப்பட்ட என்புக்கூடுகளை அடையாளம் காண மரபணு சோதனை

செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட 110 நாள் அகழ்வு பணிகளுக்காக 5 கோடியே 79 இலட்சத்து 68ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்

செம்மணி மனிதப் புதைக்குழி மூன்று கட்டங்களாக இதுவரையில் 110 நாட்கள் அகழ்வுப்பணிகள் இடம்பெற்ற நிலையில் இதுவரையில் 5 கோடியே 79 இலட்சத்து 68 ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கிறது.

குறித்த அகழ்வு பணிகளில் இதுவரையில் 584 மனித என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை அடையாளம் காணும் பொருட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் மரபணு சோதனைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை விரைவுப்படுத்துவோம் என அவர்  மேலும் தெரிவித்தார்.

இதேவேளை காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம்,  31 பேரை தாம் இதுவரையில் கண்டறிந்துள்ளதாகவும்  5,540 பேருக்கு இடைக்கால நிவாரணம் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ‘எமக்குக் கிடைக்கப்பெற்ற 23,352 விண்ணப்பங்களில்,  முப்படையினர் மற்றும் இரட்டிப்பான விண்ணப்பங்களைத் தவிர்த்து 16,966 விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

இவற்றில் இதுவரை 9, 819 முறைப்பாடுகளுக்குரிய பூர்வாங்க விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.

மேலதிக விசாரணைகளுக்காகக் கோரப்பட்ட சுமார் 2, 000 விண்ணப்பங்கள் எமது தலைமை அலுவலகத்தில் உள்ள தேடுதல் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் ஏறத்தாழ 800 விண்ணப்பங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குக் கடிதங்கள் மூலம் அனுப்பி விவரங்கள் தேடப்பட்டு வருகின்றன.

அதேவேளை,  எமக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இதுவரை 31 பேரை நாம் நேரடியாகக் கண்டுபிடித்துள்ளோம்’ எனத் தெரிவித்தனர்.

அத்துடன் இடைக்கால நிவாரணம் வழங்குவதற்காக இதுவரை 7726 முறைப்பாடுகள் இழப்பீட்டு அலுவலகத்துக்குச் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதுடன்இ 5540 விண்ணப்பதாரிகளுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

உரிய இழப்பீட்டை வழங்குவது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக தற்போதைய அரசாங்கமும் நீதி அமைச்சரும் இணைந்து விசேட குழுவொன்றை நியமித்துள்ளனர். அக்குழுவின் பரிந்துரைகள் கிடைத்த பின்னர் இழப்பீடு வழங்கும் முறை குறித்துத் தீர்மானிக்கப்படும்’ எனவும் குறிப்பிட்டனர்.

Source: https://samugammedia.com/dna-testing-to-identify-the-babies-recovered-in-semmanil-1787568811

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.