செம்மணி புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் 14 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் குழந்தை ஒன்றும் சிறுவர் ஒருவருடையுமாக 05 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 27ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் நடைபெற்றது.
என்புக்கூடொன்றின் இடுப்பு பகுதியில் ஒரு இரும்பு வலயம் ஒன்று சான்று பொருள் மீட்கப்பட்டுள்ளது. சிறுமி ஒருவருடைய பிளாஸ்ரிக் காப்பை ஒத்த பொருள் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதனை சுத்தப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இதுவரையிலான அகழ்வு பணிகளின் போது, 380 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 362 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

