முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வேலணை பிரதேச சபையில் கடும் வாக்குவாதம்: உறுப்பினர்களிடையே முற்றிய முறுகல்!

வேலணை பிரதேச சபையின்  மாதாந்த அமர்வின்போது தேசிய மக்கள் சக்தி மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கடும் வாக்குவாதமாக மாறியதால் சபையில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டுள்ளது.

வேலணை பிரதேச சபையின் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் சபை அமர்வு  நேற்று இடம்பெற்றது.

இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் உறுப்பினர்களால் கேள்விகளும் கருத்துகளும் முன்வைக்கப்பட்டு விவாதங்கள் இடம்பெற்றன.

குறிப்பாக, கோயில் ஒன்றின் திருவிழாவை முன்னிட்டு வீதியோரங்களில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வியே உறுப்பினர்களுக்கு இடையிலான முறுகலுக்கு காரணமாக அமைந்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சதீஸ்குமார் இந்த விடயம் தொடர்பில் தவிசாளரிடம் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அதற்கு தவிசாளர் விளக்கமளித்துள்ளார்.

இதனையடுத்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் பார்த்தீபன் குறித்த விடயம் தொடர்பில் பதிலளிக்க முற்பட்ட நிலையில், இரு உறுப்பினர்களுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் இந்த வாய்த்தர்க்கம் படிப்படியாக தீவிரமடைந்து கடும் வாக்குவாதமாக மாறியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் ஒருமையில் அழைத்து கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் சபை அமர்வில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், ஏனைய உறுப்பினர்களும் தலையிட்டு நிலைமையை கட்டுப்படுத்த முயன்றுள்ளனர்.

இதேவேளை, சபை அமர்வுகளின்போது உறுப்பினர்கள் தவிசாளரிடம் கேள்விகளை முன்வைக்கும் சந்தர்ப்பங்களில், அதற்கான பதிலை தவிசாளரே வழங்குவது வழமையான நடைமுறை என சில சபை உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும், கடந்த சில அமர்வுகளிலும் தவிசாளரை நோக்கி உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு குறித்த உறுப்பினர் தன்னிச்சையாக பதிலளிக்க முற்படுவதாகவும், இதனால் உறுப்பினர்களுக்கு இடையே தொடர்ச்சியாக முரண்பாடுகள் ஏற்பட்டு வருவதாகவும் சில உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில்,  நேற்றைய அமர்வில் இடம்பெற்ற கடும் வாக்குவாதம் ஏற்கனவே காணப்பட்ட முரண்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Source: https://samugammedia.com/heated-debate-in-the-velanai-divisional-council-clash-among-the-members-1789621603

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.