முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

சிறுநீரக நோய், கட்டுப்பாடற்ற நீரிழிவு மற்றும் கடுமையான நீரிழப்பு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சிக்கல்களைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்குறிப்பிட்ட நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் சோடியம் பைகார்பனேட் ஊசிகளுக்கு (Sodium Bicarbonate Injection) தட்டுப்பாடு இருப்பதாக சுகாதார அமைச்சின் (Ministry of Health) வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த தடுப்பூசிகள் தட்டுப்பாடு காரணமாக, தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளுக்கும்,உடலுறுப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிப்பதில், வைத்தியர்கள் கடும் சிரமத்தை எதிர் நோக்கியுள்ளதாக சுகாதார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம்

இந்த நிலையில் சோடியம் பைகார்பனேட் தடுப்பூசியை உள்நாட்டில் தயாரிப்பதற்கு தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரி ஒரு குறிப்பிட்ட நிறுவனம் சமர்ப்பித்த விண்ணப்பத்துக்கு ஒப்புதல் அளிக்க இரண்டு ஆண்டுகள் ஆனதே இந்த தடுப்பூசி பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு | Sodium Bicarbonate Injections Shortage Health Mini

அத்துடன் மருத்துவ வழங்கல் பிரிவு நிறுவனத்திற்கு இதுவரை தடுப்பூசிகளுக்கான முன்பதிவை வழங்கவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, உள்நாட்டிலேயே தடுப்பூசிகளை தயாரித்து இறக்குமதி செய்யுமாறு தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்திடம் மற்றுமொரு நிறுவனம் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ள போதிலும், இதுவரை அனுமதியும் கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

தீவிர சிகிச்சைக்கு தேவையான மருந்து

இந்த தடுப்பூசியின் அவசியம் குறித்து மயக்கவியல் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் டொக்டர் வினோதனி வணிகசேகர கருத்து வெளியிட்டுள்ளார்.

தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு | Sodium Bicarbonate Injections Shortage Health Mini

அதன்படி “நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சைக்கு இந்த மருந்து தேவை. சிக்கல்கள் ஏற்பட்டால், குறைந்த இரத்த அழுத்தம் ஏற்பட்டால், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் போது சோடியம் பைகார்பனேட் தேவைப்படுகிறது.

இது நோயாளிகளின் இரத்தத்தில் அமிலத்தன்மையைக் குறைக்க உதவுகிறது. இது அன்றாட தேவைக்கு பயன்படும் மருந்து அல்ல. ஆனால் இக்கட்டான சூழ்நிலைகள் இருக்கும்போது, ​​​​அது அவசியமாகிறது, ”என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.