கடந்த இரண்டு நாட்களாக தங்க விலையில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், இன்று (10) தங்க விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள தகவலின்படி,
24 கரட் தங்கம் ஒரு பவுணுக்கு 5,000 ரூபாயால் குறைந்துள்ளது.
அதன்படி, தற்போதைய சந்தை நிலவரத்தின் அடிப்படையில் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 378,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 347,800 ரூபாயாகவும் விற்பனையாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 47,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 43,475 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுவதாக நகையக வியாபாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
தங்கம் வாங்கத் திட்டமிட்டு இருந்தவர்களுக்கு இன்றைய விலை குறைவு ஓரளவு நிவாரணமாக அமைந்துள்ளதாக சந்தை தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை அமெரிக்க டொலருக்கு நிகராக வீழ்ச்சியடைந்து வந்த இலங்கை ரூபா, இன்று (10) மீண்டும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்றைய தினம் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 324.66 ரூபாவாகவும், விற்பனை விலை 335.39 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதேவேளை, ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கான மாற்று விகிதங்கள் வருமாறு:
ஸ்டெர்லிங் பவுண்ட் (GBP) கொள்வனவு விலை 432.32 ரூபாவாகவும், விற்பனை விலை 449.66 ரூபாவாகவும்,
யூரோ (EUR) கொள்வனவு விலை 373.43 ரூபாவாகவும், விற்பனை விலை 388.67 ரூபாவாகவும்,
அவுஸ்திரேலிய டொலர் (AUD): கொள்வனவு விலை 224.90 ரூபாவாகவும், விற்பனை விலை 237.69 ரூபாவாகவும்,
சிங்கப்பூர் டொலர் (SGD): கொள்வனவு விலை 249.47 ரூபாவாகவும், விற்பனை விலை 261.87 ரூபாவாகவும்,
கனடிய டொலர் (CAD) கொள்வனவு விலை 230.86 ரூபாவாகவும், விற்பனை விலை 241.15 ரூபாவாகவும், பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

