சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ததுகம் ஓயாவில் இருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (வெள்ளிக்கிழமை 12) ததுகம் ஓயாவில் சடலம் மிதப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சீதுவை பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், அவர் சுமார் 60 வயது மதிக்கத்தக்கவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர் சுமார் 5 அடி 5 அங்குலம் உயரமுடையவர் என்றும், வெளிர் சாம்பல் நிற அரைக்கைச் சட்டை மற்றும் பழுப்பு நிற நீளக் காற்சட்டை அணிந்திருந்ததாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
சடலம் தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சீதுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Source: https://samugammedia.com/mysterious-body-found-in-thatugam-oya-shock-in-seeduwa-1781328508

