முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தியாகி பொன். சிவகுமாரன் நினைவேந்தல் ஏற்பாடு: தவிசாளர் நிரோஷ் நாளை விசாரணைக்கு அழைப்பு!

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதல் வித்தாக நஞ்சருந்தி தன்னுயிரை ஆகுதியாக்கிய தியாகி பொன். சிவகுமாரனின் 52ஆவது நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடுகள் தொடர்பில், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் பொலிஸ் விசாரணைக்கு நாளை அழைக்கப்பட்டுள்ளார்.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் உத்தியோகபூர்வ தீர்மானத்துக்கு அமைவாக, தியாகி பொன். சிவகுமாரனின் 52ஆவது நினைவேந்தல் நிகழ்வு உரும்பிராயில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு முன்பாக, நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு உணர்வெழுச்சியுடன் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

பிரதேச சபைக்குச் சொந்தமான சந்தை வளாகப் பகுதியில் சபையின் உறுப்பினர்கள், தமிழ் உணர்வாளர்கள் மற்றும் உரும்பிராய் பிரதேச இளைஞர்கள் இணைந்து இந்த நினைவேந்தல் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்தநிலையில், அங்கு வந்த பாதுகாப்புப் பிரிவின் புலனாய்வாளர்கள் ஏற்கனவே புகைப்படம் மற்றும் காணொளிகளைப் பதிவு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்தே, தமக்குக் கிடைக்கப் பெற்ற விசேட முறைப்பாடு ஒன்றின் அடிப்படையில் விசாரணை நடத்துவதற்காக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷைக் கோப்பாய் பொலிஸார் அவசரமாகத் தங்களது நிலையத்துக்கு நாளை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு அழைத்துள்ளனர்.

இவ்விடயம் குறித்து தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவிக்கையில்,

“அரசானது தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமைகளுக்குத் தடையில்லை எனப் பேச்சு அளவில் சர்வதேசத்துக்குத் தெரிவித்து வருகின்ற போதிலும், செயலளவில் அடிப்படை நினைவேந்தல் உரிமைகளைக்கூட அங்கீகரிக்க மறுக்கும் அடக்குமுறைப் போக்கையே தற்போது வரை கடைப்பிடித்து வருகின்றது.” – என்றார்.

Source: https://samugammedia.com/thiyagi-ponn-sivakumaran-memorial-event-devotee-nirosh-summoned-for-inquiry-tomorrow-1780498791

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.