முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தூங்கிக் கொண்டிருந்த வயோதிப தம்பதிக்கு நேர்ந்த பேராபத்து! – வீட்டை உடைத்து புகுந்த யானை

முல்லைத்தீவு – கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகளின் தொடர் அச்சுறுத்தல் காரணமாக, மக்கள் உயிர் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக கவலை தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, கடந்த சில நாட்களுக்கு முன்னர் அப்பகுதியில் வசிக்கும் வயோதிப குடும்பம் ஒன்றின் வீட்டிற்குள் புகுந்த காட்டு யானை, வீட்டின் யன்னலை உடைத்ததுடன், வீட்டில் வைக்கப்பட்டிருந்த அரிசிப் பைகள் மற்றும் பயன்தரும் மரங்களையும் சேதப்படுத்திச் சென்றுள்ளது.

இந்நிலையில், இன்று (25) அதிகாலை சுமார் 3 மணியளவில் மீண்டும் அதே வீட்டிற்குள் புகுந்த காட்டு யானை, வீட்டின் சுவரை உடைத்து சேதப்படுத்தியுள்ளதுடன், அருகிலுள்ள மேலும் சில வீடுகளையும் சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளது.

குறித்த வயோதிப குடும்பத்தினர் தனிமையில் வசித்து வரும் நிலையில், சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்திருந்தால் பாரிய உயிராபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் என அப்பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

யானைகளால் ஏற்படுத்தப்பட்ட சேதங்கள் தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவித்தபோதிலும், இதுவரை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிடவில்லை எனவும், பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வழங்கப்படவில்லை எனவும் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

“யானைக்கு ஏதாவது சேதம் ஏற்பட்டாலோ அல்லது யானையை சுட்டு வீழ்த்தும் சம்பவம் ஏற்பட்டாலோ உடனடியாக அதிகாரிகள் வருகின்றனர். ஆனால், மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது ஏன் அதே அளவிலான அக்கறை காட்டப்படுவதில்லை?” என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தொடர்ச்சியாக காட்டு யானைகள் குடியிருப்புகளுக்குள் நுழைந்து வீடுகள் மற்றும் மக்களின் உடமைகளை சேதப்படுத்தி வருவதால், தினமும் அச்சத்துடனேயே வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உடனடியாக யானை வேலி அமைத்துத் தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்காக ஏற்கனவே அதிகாரிகளிடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் தை மாதத்தில் யானை வேலி அமைத்துத் தரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

எனினும், அதுவரை காத்திருக்க முடியாது எனவும், தொடர்ச்சியான உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதால் உடனடியாக யானை வேலி அமைக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஞானதாஸ் யூட்சன், பாதிக்கப்பட்ட மக்களிடம் சம்பவம் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.

கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் இந்த விடயம் தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டதாகவும், அப்போது யானை வேலி அமைத்துத் தருவதாக தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.

Source: https://samugammedia.com/disaster-strikes-an-elderly-couple-who-were-sleeping–an-elephant-breaks-into-their-house-1790317529

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.