நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி தோழர் ஹர்ஷண நாணயக்கார அவர்களின் பங்குபற்றலுடன், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடனான சந்திப்பு இன்று நல்லூர் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நான் கலந்துகொண்டு, உறவினர்களின் கருத்துக்கள், கவலைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நேரடியாகக் கேட்டறிந்தேன்.
நீண்டகாலமாக நீதியையும் உண்மையையும் எதிர்நோக்கி வாழும் குடும்பங்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அவர்களுடன் விரிவான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களின் குரலுக்கு உரிய மதிப்பளித்து, அவர்களின் பிரச்சினைகளுக்கு நிலையான மற்றும் நீதியான தீர்வுகளை நோக்கி அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகவும், அவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக உரிய கவனம் செலுத்தப்படும் எனவும் இச்சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது.
மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில், நல்லிணக்கமும் நீதியும் நிலைநாட்டப்படும் ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கான முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.

