முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நான் போர்க்குற்றவாளி அல்ல, எனது நாட்டுக்காக போராடினேன்! – சவேந்திர சில்வா முழக்கம்

இறுதிப்போரின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகத் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவத் தளபதியும் முன்னாள் பாதுகாப்புப் படைகளின் பிரதானியுமான ஜெனரல் சவேந்திர சில்வா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கருத்து வெளியிட்ட அவர், தன் மீது சுமத்தப்பட்டுள்ள குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களுடன் பதிலளிக்கத் தயாராக இருப்பதாகவும், சர்வதேச அளவில் தன் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கான அடிப்படை குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை பாதுகாப்புப் படையினர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக தொழில்முறை ரீதியிலேயே போரிட்டதாகவும், 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட இராணுவ நடவடிக்கையின்போது பொதுமக்கள் உயிரிழப்புகளை குறைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2020ஆம் ஆண்டு அமெரிக்காவும், 2025ஆம் ஆண்டு பிரித்தானியாவும் தன் மீது தடைகளை விதித்துள்ள நிலையில், அவற்றுக்கான காரணங்கள் தொடர்பில் தொடர்ந்து விளக்கம் கோரி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். தான் ஒரு போர்க்குற்றவாளி அல்ல என்றும், தாய்நாட்டுக்காகவே போரிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இராணுவத்தினர் வேண்டுமென்றே பொதுமக்களை இலக்கு வைக்கவில்லை எனத் தெரிவித்த சவேந்திர சில்வா, போரின்போது பொதுமக்கள் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்றாலும், அவை திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டவை அல்ல என்றும் விளக்கமளித்துள்ளார்.

மேலும், 2009ஆம் ஆண்டு போரின் இறுதிக் கட்டத்தில் தனது 58ஆவது படைப்பிரிவு 123,000க்கும் அதிகமான பொதுமக்களை மீட்டதாகவும், சரணடைந்த சுமார் 12,000 புலிகள் உறுப்பினர்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமானோர் தனது படைப்பிரிவிடமே சரணடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சரணடைந்தவர்களுக்கு பின்னர் புனர்வாழ்வு வழங்கப்பட்டு சமூகத்தில் மீண்டும் இணைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், புலிகளின் வட பிராந்திய சிரேஷ்ட தளபதி ஒருவர் சிவில் உடையில் ஆயுதத்துடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டிய அவர், சீருடை அணியாத போராளிகள் கொல்லப்படும் சந்தர்ப்பங்களில் அவர்கள் பொதுமக்களாகக் கணக்கிடப்படும் நிலை காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதேவேளை, அடுத்தடுத்து வந்த இலங்கை அரசாங்கங்கள் சர்வதேச அரங்கில் இராணுவத்தின் தரப்பு நியாயங்களை உரிய முறையில் முன்வைக்கத் தவறியமையே தன் மீதான குற்றச்சாட்டுகள் சர்வதேச அளவில் வலுப்பெறுவதற்கு காரணமாக அமைந்ததாகவும் சவேந்திர சில்வா விமர்சித்துள்ளார்.

குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்துடன் கூடிய ஆதாரங்களை முன்வைத்து நேரடி விவாதத்துக்கு வருமாறு சர்வதேச அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ள அவர், தமது தரப்பில் தவறு இடம்பெற்றிருப்பது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், விடுதலைப் புலிகள் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும், தமிழ் மக்களின் அரசியல் மற்றும் சமூகக் குறைகளுக்கு அரசியல் ரீதியான தீர்வே காணப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Source: https://samugammedia.com/i-am-not-a-war-criminal-i-fought-for-my-country–savendira-silvas-outcry-1788840523

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.