முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நீதிமன்றத்தை அவமதிப்பு: 6 பேருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் தகவல் சமர்ப்பிப்பு

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகளின் கீழ் ஆறு அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, சுகீஸ்வர பண்டார, திலித் ஜயவீர, அசங்க நவரத்ன மற்றும் மஹிந்த பத்திரண ஆகியோருக்கு எதிராகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 7ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் கீழ் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சல்லே கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சத்தியாகிரகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, குறித்த ஆறு பேரும் நீதிமன்ற நடவடிக்கைகளை விமர்சிக்கும் வகையில் பகிரங்கமாக கருத்துக்களை வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கடந்த ஆகஸ்ட் 5ஆம் திகதி கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் தகவல்களை சமர்ப்பித்திருந்தது.

அவற்றை ஆராய்ந்த கோட்டை நீதவான் நீதிமன்றம், குறித்த நபர்கள் வெளியிட்ட கருத்துக்கள் முதற்கட்ட அவதானிப்பில் நீதிமன்ற நடவடிக்கைகளை விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட ஆறு பேருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்காக வழக்கை பரிந்துரைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Source: https://samugammedia.com/contempt-of-court-case-filed-in-the-higher-court-against-6-people-1787550968

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.