முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: உயிரிழப்பு 7 ஆக உயர்வு; 50-க்கும் மேற்பட்டோர் காயம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் திங்கட்கிழமை (06) காலை ஏற்பட்ட மோதலில், சிறைச்சாலை அதிகாரிகள் மூவர் உட்பட மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திங்கட்கிழமை (06) காலை காலை 11.00 மணி நிலவரப்படி, காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. இதில் சிறைச்சாலை அதிகாரிகள், காவல்துறையின் விசேட அதிரடிப்படை (STF) வீரர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அடங்குவர். உயிரிழந்தவர்களில் ஒருவர் கைதி என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது; மற்றுமொருவர் யார் என்பது குறித்து இதுவரை அடையாளம் காணப்படவில்லை என வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் பல அதிகாரிகளை வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்களில் சிறைச்சாலை அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் கைதிகள் எனப் பல தரப்பினரும் உள்ளடங்குவதாகவும் அறிய முடிகிறது.

ஞாயிற்றுக்கிழமை (05) அன்று ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்ததுடன், 33 பேர் காயமடைந்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக, கடந்த இரு தினங்களில் இடம்பெற்ற இந்த வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளதுடன், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 50-ஐ நெருங்கியுள்ளது.

Source: https://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-7-%E0%AE%86%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-50-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/150-379517

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.