வவுனியா வடக்கு, நெடுங்கேணி ஒலுமடு பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இன, மத ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அமைச்சர், மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர், தொல்லியல் திணைக்களம், பொலிஸார் மற்றும் வனவளத் திணைக்கள அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
ஆலய பூசகர் மதிமுகராஜா தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பாரம்பரிய முறையில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன.
இதில் வவுனியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்வு இன, மத நல்லிணக்கத்தையும் பாரம்பரிய வழிபாட்டு முறைகளையும் பாதுகாக்கும் வகையில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Source: https://samugammedia.com/traditional-pongal-festival-at-nedunkeni-adilingeswarar-temple-1787382980

