முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பொதியிடப்படாத தேங்காய் எண்ணெய் விற்பனைக்கு தடை – புதிய வர்த்தமானி விரைவில்

பொதியிடப்படாத நிலையில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்வதைத் தடை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற பொது நிறுவனங்கள் பற்றிய குழுவான கோப் குழுவின் உப குழு முன்னிலையில் கருத்து தெரிவிக்கும்போதே, நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பதில் பணிப்பாளர் நாயகம் சமந்தா கருணாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது தேங்காய் எண்ணெய் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாகவும், இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் புதிய வர்த்தமானி அறிவித்தலொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வர்த்தமானி விரைவில் வெளியிடப்படும் எனவும், அதன் பின்னர் தேங்காய் எண்ணெய் பொதியிடப்பட்ட நிலையிலேயே விற்பனை செய்யப்படுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேங்காய் எண்ணெய் திறந்த நிலையில் விற்பனை செய்யப்படுவதன் காரணமாகவே அதிகளவில் கலப்படம் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டிய அவர், பொதியிடப்பட்ட நிலையில் விற்பனை செய்யப்படும்போது அதன் உற்பத்தி மற்றும் தரம் தொடர்பான தகவல்களை இலகுவாக அடையாளம் காண முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

புதிய நடைமுறையின் கீழ், தேங்காய் எண்ணெய் பொதிகளில் தயாரிப்பின் பெயர், எடை, விலை, காலாவதி திகதி, தொகுதி எண் மற்றும் உற்பத்தியாளரின் விபரங்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் கட்டாயமாக இடம்பெறும் எனவும் சமந்தா கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் தேங்காய் எண்ணெய் யாரால் உற்பத்தி செய்யப்பட்டது, எங்கிருந்து பெறப்பட்டது, அது முறையாக சுத்திகரிக்கப்பட்டதா அல்லது கலப்படம் செய்யப்பட்டதா என்பன உள்ளிட்ட விடயங்களை அடையாளம் காண முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Source: https://samugammedia.com/ban-on-the-sale-of-unrefined-coconut-oil–new-trade-rules-coming-soon-1790143209

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.