முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

போலி பட்டச் சான்றிதழ் தயாரித்த நிலையம் முற்றுகை; சுமார் 200 பேர் வெளிநாடு சென்றதாக தகவல்!

கம்பஹா, இம்புல்கொட, ராஜசிங்க மாவத்தையில் வாடகை வீடொன்றில் பெருமளவிலான போலி பட்டச் சான்றிதழ்கள், உத்தியோகபூர்வ ஆவணங்கள் மற்றும் நிறுவனங்களின் முத்திரைகளை தயாரித்து வந்த நிலையமொன்றை பொலிஸார் முற்றுகையிட்டு, சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

கம்பஹா பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், புலனாய்வாளர்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது கைது செய்யப்பட்டவர் தங்காலை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதாந்தம் 35,000 ரூபாய் வாடகைக்கு பெறப்பட்ட குறித்த வீட்டில் சுமார் ஒரு வருடமாக இந்த சட்டவிரோத நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

முற்றுகையின்போது, 2 மடிக்கணினிகள், 2 ஸ்மார்ட்போன்கள், ஒரு வர்ண அச்சு இயந்திரம், 35 போலி சான்றிதழ்கள், நிறுவனத் தலைவர்களின் 51 உத்தியோகபூர்வ முத்திரைகள் மற்றும் 3 எம்போஸ் முத்திரைகள் உள்ளிட்ட பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பல்கலைக்கழகங்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் உத்தியோகபூர்வ முத்திரைகள் மற்றும் கடிதத் தலைப்புகள் குறித்த இடத்தில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை பரீட்சைத் திணைக்களம், தனியார் வங்கி ஒன்றுடன், பேராதனை, ஸ்ரீ ஜயவர்தனபுர, களனி, மொரட்டுவை, ருஹுண, ரஜரட்ட, வயம்ப மற்றும் ஊவா வெல்லஸ்ஸ உள்ளிட்ட பல அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் உத்தியோகபூர்வ முத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர் சாதாரண போலிச் சான்றிதழ்களை 25,000 முதல் 50,000 ரூபாய் வரையிலான தொகைக்கு விற்பனை செய்துள்ளதாகவும், ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் செல்வதற்குத் தேவையான போலிச் சான்றிதழ்களை சுமார் 4 இலட்சம் ரூபாய் வரை பெற்றுக்கொண்டு தயாரித்துக் கொடுத்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், இவ்வாறு தயாரிக்கப்பட்ட போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இதுவரை சுமார் 200 பேர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யக்கல பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Source: https://samugammedia.com/raid-on-place-making-fake-degree-certificates-information-says-about-200-people-went-abroad-1789970841

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.