முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மதுபோதையிலும் வாகனத்தை செலுத்தியதால் கோர விபத்து: ஒருவர் பலி, ஒருவர் தீவிர சிகிச்சையில்

பொலன்னறுவை – மஹியங்கனை பிரதான வீதியின் திம்புலாகல, நாமல்பொக்குண பகுதியில் இன்று (22) பிற்பகல் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.

இன்று பிற்பகல் 1.00 மணியளவில் காரொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் திம்புலாகல, மகாஉல்பத பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பொலன்னறுவை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் அலட்சியமாகவும் மதுபோதையிலும் வாகனத்தை செலுத்தியதே விபத்துக்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக மனம்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, விபத்து தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மனம்பிட்டிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/serious-accident-caused-by-driving-under-the-influence-one-person-dead-another-in-intensive-care-1784726517

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்