முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும்! அனைத்து தரப்புடனும் கலந்துரையாட நாங்கள் தயார்! தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க தெரிவிப்பு

“பல ஆண்டுகளாகப் பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாகவுள்ளோம். இது தொடர்பில் சகல அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் தரப்புகளுடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளோம்.”

இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஊடகங்களால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற விசேட செயற்குழுவில் தேர்தல்கள் ஆணைக்குழு முன்னிலையாகிப் பல யோசனைகளை முன்வைத்துள்ளது. குறிப்பாக, பழைய தேர்தல் முறைமையின் கீழ் தேர்தலை நடத்தலாம் எனச் சட்டமா அதிபர் திணைக்களம் முன்வைத்துள்ள திருத்தப் பரிந்துரைகளுக்கு இணையாக எமது யோசனைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகள் தொடர்ந்தும் இயங்குவது ஜனநாயகத்துக்கு முற்றிலும் விரோதமானது என்பதால், செயற்குழு பரிந்துரைகளை விரைவில் ஆராய்ந்து உறுதியான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.

மாகாண சபைத் தேர்தல் குறித்துத் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் நேரடியாகக் கிடையாது. 2017ஆம் ஆண்டு இயற்றப்பட்ட புதிய தேர்தல் முறைமையின் அம்சங்கள் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாத காரணத்தினாலேயே எந்த முறையில் தேர்தலை நடத்துவது என்பதில் சிக்கல் நீடிக்கின்றது. எனவே, நாடாளுமன்றத்தின் ஊடாகவே இதற்கான உறுதியான தீர்மானம் எட்டப்பட வேண்டும்.

செயற்குழு முன்வைத்த பெண் பிரதிநிதித்துவம் தொடர்பான விடயங்களைக் கருத்தில்கொண்டு தேர்தல்கள் ஆணைக்குழு உரிய யோசனைகளை வழங்கியுள்ளது. தற்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ள இளைஞர் பிரதிநிதித்துவம் குறித்தும் மேலதிக யோசனைகளை முன்வைக்கவுள்ளோம். – என்றார்.

Source: https://samugammedia.com/provincial-council-elections-must-be-held-soon-we-are-ready-to-hold-discussions-with-all-parties-election-commission-chairman-ratnayake-states-1787993584

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.