முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தங்காலையில் வாய்த்தர்க்கம் முற்றி தாக்குதல்; அண்ணனை தடியால் அடித்துக் கொன்ற தம்பி

தங்காலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகாகொட பகுதியில் சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதில் நபர் ஒருவர் தடியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று (28) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதுடன், தாக்குதலில் படுகாயமடைந்த நபர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மகாகொட பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அண்ணன் மற்றும் தம்பிக்கு இடையே ஏற்பட்ட காரசாரமான வாய்த்தர்க்கம் தகராறாக மாறியதைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தங்காலை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய 28 வயதுடைய சந்தேகநபரான தம்பி கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/argument-in-the-gold-shop-ended-in-attack-younger-brother-killed-elder-brother-with-a-stick-1787987188

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்