உள்ளுராட்சி மன்றத் தேர்தலக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களை ரத்து செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பிலான சட்டமொன்றை உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நீதிமன்ற தீர்ப்பு
இந்த வேட்பு மனுக்களை ரத்து செய்து புதிதாக வேட்பு மனுக்களை கோருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இன்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் தேர்தல் நடத்தப்படாமையை கண்டித்து அண்மையில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.