முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மூதூர் பொலிஸ் வழங்கிய கடலை அன்னதானம்; நாடு முழுவதும் 18,000 பொசன் தன்சல்கள்

போயா பொசன் தினத்தை முன்னிட்டு மூதூர் பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் கடலை அன்னதானம் இன்று (29) காலை மூதூர் – திரிசீடி சந்தியில் வைத்து பொதுமக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது வீதியால் வாகனங்களில் பயணித்தோர் இடைநிறுத்தப்பட்டு அவர்களுக்கு கடலை அன்னதானம் வழங்கி வைக்கப்பட்டது.

மூதூர், தோப்பூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள், தேசிய மக்கள் சக்தியின் மூதூர் பிரதேச இணைப்பாளர், கிளீன் சிறிலங்கா இணைப்பாளர், பொலிஸார், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இணைந்து இவ் கடலை அன்னதானத்தை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 18,000 க்கும் மேற்பட்ட தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

அதற்கமைய, இதுவரையில் 18,412 தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகுட தெரிவித்துள்ளார். 

இன்று மற்றும் நாளை நடத்தப்படவுள்ள இந்த தன்சல்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதுடன், பொசன் வலயங்களைச் சுற்றியுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் தற்காலிக பொசன் வர்த்தக நிலையங்களும் இந்த வாரம் முழுவதும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன. 

இதேவேளை, தன்சல்களில் உணவு மற்றும் பானங்களை வழங்கும் போது பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்குமாறு தன்சல் ஏற்பாட்டாளர்களிடம் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

சூடான மற்றும் குளிர்ந்த உணவுகளை பொலித்தீன் பைகளில் சேமித்து வைப்பது மிகவும் ஆபத்தானது என்றும், இது குறித்து அதிக கவனம் செலுத்திச் செயலாற்றுமாறும் தன்சல் ஏற்பாட்டாளர்களுக்கு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது. 

மேலும், தற்போது பெரும் தொற்று நிலையை எட்டியுள்ள டெங்கு நோய் நிலைமை குறித்தும் அவதானம் செலுத்துமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. 

Source: https://samugammedia.com/muthur-police-provided-chickpeas-as-food-donation-18000-poison-tons-across-the-country-1782716415

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.