முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மெணிக்ஹின்னவில் உணவு வழங்கியபோது தாக்கிய யானை – முதியவர் பலி

கண்டி -குண்டசாலை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மெணிக்ஹின்ன பகுதியில், “முது” எனப்படும் வளர்ப்பு யானையின் தாக்குதலில் 61 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை (30) இரவு சுமார் 8.00 மணியளவில், கணதேவி விகாரைக்கு அருகிலேயே இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தகவலின்படி, உயிரிழந்தவர் யானையின் உரிமையாளரின் சித்தப்பா எனவும், இதற்கு முன்பே “முது” யானையின் தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் இந்த சம்பவம் நான்காவது உயிரிழப்பாக பதிவாகியுள்ளது.

சம்பவத்தின் போது, யானை கட்டப்பட்டிருந்த இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள தானசாலையிலிருந்து பாண்களை எடுத்துவந்து யானைக்கு உணவாக வழங்க முயன்ற போதே தாக்குதல் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

யானை அந்த நபரைத் தாக்கிய போது, அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்க கடுமையாகப் போராடிய போதிலும் அது தோல்வியில் முடிவடைந்தது.

மேலும், தாக்குதலுக்குப் பின்னரும் யானை சம்பவ இடத்திலேயே நீண்ட நேரம் அசையாமல் நின்றிருந்ததாகவும்  சடலத்தை மீட்கவும் சுமார் இரண்டரை மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தெல்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://samugammedia.com/an-elephant-attacked-an-elderly-man-while-food-was-being-served-at-menikhinna—the-elderly-man-died-1782883920

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்