முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் வீடு வீடாக புகுந்து திருட்டு; 43 பவுண் தங்க நகைகளுடன் மூவர் சிக்கினர்

யாழ் குடாநாட்டில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த மாதம் 9ஆம் திகதி சாவகச்சேரி நகரில் உள்ள நகைக் கடை உரிமையாளரின் வீட்டில் இருந்து 17 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தன.

இந்தச் சம்பவம் தொடர்பில் சிசிடிவி காணொளிகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், நவாலியைச் சேர்ந்த பிரதான சந்தேக நபர் நேற்று (22) யாழ்ப்பாணம் நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், கோப்பாய் பகுதியில் மூன்று வீடுகளிலும், வட்டுக்கோட்டை மற்றும் சாவகச்சேரி பகுதிகளில் தலா ஒரு வீட்டிலும் என மொத்தம் ஐந்து வீடுகளில் தங்க நகைகள் திருடப்பட்டமை தெரியவந்துள்ளது.

மேலும், ஊர்காவற்றுறையில் உள்ள வங்கி ஒன்றில் 43 பவுண் தங்க நகைகள் அடகு வைக்கப்பட்டிருந்தமையும் பொலிஸாரின் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

அவ்வாறு அடகு வைத்து பெறப்பட்ட பணத்தில் சந்தேக நபர் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், பிரதான சந்தேக நபருக்கு உதவியதாகக் கூறப்படும் ஊர்காவற்றுறையைச் சேர்ந்த பெண் ஒருவரும், நவாலியைச் சேர்ந்த ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/burglaries-hit-houses-in-jaffna-three-caught-with-43-pounds-of-gold-jewelry-1787483532

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்