முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ்ப்பாணத்தில் 81 கிலோ ‘ஐஸ்’,ஹெரோயினுடன் சிக்கிய படகு

வடக்குக் கடற்கரைப் பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது பொறுப்பேற்கப்பட்ட படகில் ‘ஐஸ்’ மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் நிபுணத்துவப் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வந்த சோதனைகளின் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். 

இதற்கமைய, சுமார் 81 கிலோ கிராம் எடையுள்ள போதைப்பொருள் தொகுதி அதில் காணப்படுவதாகக் கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர். 

 இன்று (27) அதிகாலை யாழ்ப்பாணம் மாதகல், குசுமந்துறை கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே போதைப்பொருட்களுடன் கூடிய இந்தப் படகைக் கடற்படையினர் பொறுப்பேற்றனர். 

இதன்போது சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் படகொன்றும் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டது. 

வடக்கு கடற்படை கட்டளைக்குட்பட்ட பிரிவுகளும் இலங்கை கடற்படைக் கப்பல் அக்போ நிறுவனத்தின் அதிகாரிகளும் இணைந்து இன்று இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். 

கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட போதைப்பொருள் தொகுதி தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

Source: https://samugammedia.com/boat-seized-in-jaffna-with-81-kg-of-ice-and-heroin-1790487999

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்