இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் இன்று கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை பிணையில் செல்ல நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.
இலங்கை கடற்படை மற்றும் பிரித்தானிய கடற்படை அகடமியில் இணைந்தது தொடர்பான விசாரணைக்கு அமைவாக, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விடுத்த அறிவித்தலுக்கு இணங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.
இந்நிலையில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து யோஷித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Source: https://samugammedia.com/yoshitha-rajapaksa-granted-bail-1781694833

