நாட்டின் சில பகுதிகளில் இன்று சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது
அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடையே லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் சீரான வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்கள் மற்றும் மாத்தளை, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
Source: https://samugammedia.com/strong-winds-are-likely-in-areas-including-the-north-1784341895

