முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வடக்கு மாகாண கால்நடை வைத்தியர்கள் நாளை முதல் தொடர் சுகயீனப் போராட்டம்!

வடக்கு மாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள், நீண்டகாலமாக நிலவி வரும் நிர்வாக மற்றும் சேவை சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டி, நாளை  முதல் தொடர் சுகயீன விடுமுறைப் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர்.

பொருத்தமான கடமைப் பட்டியல், ஆளணிப் பற்றாக்குறையைத் தீர்த்தல், போதிய மருந்துகள் மற்றும் களப்பணிக்கான வாகனங்களை வழங்குதல், காலியாக உள்ள உயர் பதவிகளை நிரப்புதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர்.

மேலும், தங்களது பணியின் தன்மைக்கு ஏற்ப விரல் அடையாளப் பதிவு தொடர்பில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த ஏற்பாடுகள் புறக்கணிக்கப்பட்டு, அனைத்து நாட்களிலும் விரல் அடையாளப் பதிவு செய்ய நிர்வாக அழுத்தம் வழங்கப்படுவதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.

விரல் அடையாளப் பதிவு இல்லாத நாட்களை விடுமுறையாகக் கணிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது எனத் தெரிவித்துள்ள வைத்தியர்கள், தினக்குறிப்புகள், களப்பணி பதிவுகள், வாகனப் பதிவுகள், கூட்டப் பங்கேற்புகள் மற்றும் சிகிச்சைப் பதிவுகள் உள்ளிட்ட உத்தியோகபூர்வ ஆவணங்கள் மூலம் தங்களது பணியை உறுதிப்படுத்த முடியும் எனக் கூறியுள்ளனர்.

அதேவேளை, இந்தப் போராட்டம் பண்ணையாளர்களுக்கு எதிரானது அல்ல எனத் தெரிவித்துள்ள சங்கம், அவர்களுக்கு தொடர்ச்சியான மற்றும் தரமான கால்நடைச் சேவையை வழங்குவதற்கான நிர்வாக ஏற்பாடுகளை உறுதி செய்வதே தங்களது நோக்கம் எனக் குறிப்பிட்டுள்ளது.

தங்களது நியாயமான கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்பட்டால், தொழிற்சங்க நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவரத் தயாராக இருப்பதாகவும் வடக்கு மாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Source: https://samugammedia.com/northern-province-veterinarians-to-launch-continuous-sick-leave-protest-starting-tomorrow-1789378759

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.