முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வலி வடக்கில் சுவீகரிக்கப்பட்ட 6 ஆயிரம் ஏக்கர் காணிக்கான வர்த்தமானி – யாழில் ஐரோப்பிய பிரதிநிதிகளிடம் சிவில் அமைப்புக்கள் விடுத்த கோரிக்கை

அரசாங்கத்தால் 2013 ஆம் ஆண்டு ஐந்தாம் மாதம் சுவீகரிப்பு வர்த்தமானி மூலம் வலி.வடக்கு மக்களின் 6317 ஏக்கர் காணிக்கான வர்த்தமானியை அரசாங்கம் மீளப் பெறுவதற்கான அழுத்தத்தை வழங்குமாறு யாழ்ப்பாணம் வருகை தந்த ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் எழுத்து மூலமாக கோரிக்கையை முன்வைத்தார்கள்.

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் தூதுவர்களுக்கும் சிவில் அமைப்பு பிரதிநிதிகளுக்கும் இடையிலான உயர்மட்ட கலந்துரையாடல் நேற்று   யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றபோதே இவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 

குறித்த கோரிக்கையில் யுத்தம் நிறைவடைந்து 35 வருடங்கள் கடந்தும் பொது மக்களுடைய காணிகள் பாதுகாப்பு படைகளினால் விடுவிக்கப்படாமல் கையகப்படுத்தப்பட்டு இருக்கிறது. 

வலி.வடக்கு மக்களின் சுமார் 6 ஏக்கருக்கு மேற்பட்ட காணி பாதுகாப்பு அமைச்சினால் வர்த்தமானி மூலம் சுவீகரிக்கப்பட்டுள்ள  நிலையில் குறித்த வர்த்தமானி இதுவரை மீளப்பெறப்படவில்லை.

பொதுமக்களுடைய காணிகளை பாதுகாப்பு தரப்பினரிடம் இருந்து விடுவிப்பதற்கும் சுவீகரிப்பு வர்த்தமானியை மீளப் பெறுவதற்கும் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தத்தை வழங்குமாறு கோரிக்கை முன்வைத்தனர்

கலந்துரையாடலில் இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி, மனித உரிமைகள், நல்லாட்சி, சமூக நீதி, போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான பல முக்கிய விடயங்கள் குறித்து விரிவான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.

மேலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறுபன்மை மக்களின் நீண்டகாலமாக பாதித்து வரும் காணி உரிமைப் பிரச்சினைகள், காணி மீட்பில் நிலவும் தாமதங்கள், காணி அபகரிப்பு, மற்றும் சுவீகரிப்பு அவற்றின் காரணமாக மக்கள் எதிர்நோக்கும் சமூக, பொருளாதார மற்றும் வாழ்வாதார சவால்கள் தெளிவாகவும் ஆதாரபூர்வமாகவும் முன்வைக்கப்பட்டன.

குறித்த கலந்துரையாடலில் கார்மென் மொரேனோ – ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் கலாநிதி பெலிக்ஸ் நியுமன் ஜெர்மனி தூதுவர் ரெமி லம்பேர்ட் – பிரான்ஸ் தூதுவர் டாமியானோ பிராங்கோவிக், இத்தாலி தூதுவர் விபே டி போயர்,   மற்றும் தொடர்பாடல் ஒருங்கிணைப்பாளர் செல்வி சாரா பொன்சேகா சில்வா உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Source: https://samugammedia.com/request-submitted-by-civil-organizations-to-european-representatives-in-jaffna-regarding-the-6000-acres-of-land-in-valikai-that-were-taken-1784703783

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.