முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வேலை விசா இல்லை, சம்பளமும் இல்லை! ரஷ்யாவில் சிக்கித் தவிக்கும் இலங்கை இளைஞர்கள்

ரஷ்யாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி, இலங்கை இளைஞர்களிடம் பல இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டு, அவர்களை அங்கு வேலை மற்றும் உரிய விசா இன்றி தவிக்கவிட்டதாகக் கூறப்படும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தம்புள்ளை, பிரிவென சந்தி பகுதியைச் சேர்ந்த கீர்த்தி விக்கிரமசிங்க என்பவரும், ரஷ்யாவில் வசிக்கும் அவரது உறவினரான லஹிரு பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவியும் இணைந்து இந்த வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சாக்லேட் நிறுவனம் ஒன்றில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி, ஒருவரிடம் இருந்து 18 இலட்சம் முதல் 21 இலட்சம் ரூபாய் வரையான பணம் பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும், இதன் பின்னர் பல இளைஞர்கள் ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், ரஷ்யா சென்ற ஒரு மாதத்திற்குள் தங்களுக்கு முறையான வேலை விசா இல்லை என்பதும், உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என்பதும் தெரியவந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

இளைஞர்கள் சிலர் தங்களது வீடுகள், காணிகள் மற்றும் வாகனங்களை அடமானம் வைத்தும், அதிக வட்டிக்கு கடன் பெற்றும் பணத்தை செலுத்தி ரஷ்யாவுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது அவர்கள் ரஷ்யாவில் உள்ள பண்ணை ஒன்றில் மரத்தால் அமைக்கப்பட்ட சிறிய கொட்டகை போன்ற இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், போதிய உணவு, உடை மற்றும் பாதுகாப்பான குடிநீர் இன்றி கடுமையான சூழ்நிலையில் வாழ்ந்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மேலும், எந்தவிதமான சம்பளமும் வழங்கப்படாமல் பண்ணையில் கட்டாயமாக வேலை செய்ய வைக்கப்படுவதாகவும், ரஷ்யாவில் நிலவும் போர்ச் சூழ்நிலைக்கு மத்தியில் தங்களது பாதுகாப்பு தொடர்பில் அச்சத்துடன் இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் காணொளிகள் மூலம் தெரிவித்துள்ளனர்.

மாத்தறை, கம்புருபிட்டியவைச் சேர்ந்த ஜீவன் உதேஷ் ஜயசிங்க, கண்டியைச் சேர்ந்த சுரஞ்ஜித் விஜய பண்டார, தம்புள்ளையைச் சேர்ந்த ரோஹண ஜயரத்ன மற்றும் ராஜபக்ஷ, மாவனெல்லையைச் சேர்ந்த லக்ஷ்மன் சமரகோன், கெகிராவையைச் சேர்ந்த சுபுன் ஜயவீர, வெலிகமையைச் சேர்ந்த கேஷர தீரங்க உள்ளிட்ட பல இலங்கை இளைஞர்கள் இவ்வாறு ரஷ்யாவில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, தம்புள்ளையில் உள்ள கீர்த்தி விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு ஊடகவியலாளர்கள் சென்று விசாரித்தபோது, ரஷ்யாவில் வசிக்கும் தனது உறவினரான லஹிருவுடன் இணைந்து வேலைவாய்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதையும், இளைஞர்களிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டதையும் அவர் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதே முறையில் 32க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் இதன்போது வெளியாகியுள்ளது.

தங்களுக்கு ஏற்பட்ட நிலைமை தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தொலைபேசி ஊடாக கீர்த்தி விக்கிரமசிங்கவிடம் நியாயம் கோரியபோது, தனது காணியை விற்று விரைவில் அவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதாக அவர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்த்து பெருமளவு பணத்தை செலவிட்டு ரஷ்யாவில் சிக்கியுள்ள இலங்கை இளைஞர்களை உடனடியாக மீட்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், அவர்களுக்கு உரிய சட்டரீதியான விசா மற்றும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கவோ அல்லது பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்து வரவோ உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து, குற்றச்சாட்டுகள் உண்மையென உறுதிப்படுத்தப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source: https://samugammedia.com/no-work-visa-no-salary-sri-lankan-youths-stuck-and-struggling-in-russia-1788258343

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.