முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

1 பில்லியன் டொலர் கடத்தல்: வங்கிகளின் 4முகாமையாளர்கள் கைது

மதிப்பிடப்பட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் தொகையை இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்குச் சட்டவிரோதமாக மாற்றிய ஊழல் வலையமைப்புடன் தொடர்புடைய நான்கு முன்னணி தனியார் வங்கி முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) நிதி மோசடிப் புலனாய்வுப் பிரிவினரால் (FCID) இந்தக் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நான்கு வங்கி முகாமையாளர்களும் அந்தந்தத் தனியார் வங்கிகளிலேயே வைத்துப் பிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இத்தகைய வழக்கு ஒன்றோடு தொடர்புடைய வங்கி முகாமையாளர்கள் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை எனப் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த மோசடியின் பின்னணியில் உள்ள முக்கிய நபர், அந்த நான்கு வங்கி அதிகாரிகளுக்கும் வாராந்த அடிப்படையில் பணம் செலுத்தி வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதிகாரிகளுக்கு வாரத்திற்கு முறையே 30,000 ரூபாய், 50,000 ரூபாய் மற்றும் 100,000 ரூபாய் வீதம் பணம் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட நான்கு வங்கி முகாமையாளர்களில் ஒருவர் ஒரு சந்தர்ப்பத்தில் சுமார் 1 மில்லியன் ரூபாயைப் பெற்றுள்ளதாகவும் புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (FCID) தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/1-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/150-381534

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.